”எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”
ஆசிரியர் தினம் :
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1962-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி என்பது ஒரு மனிதனின் மிக முக்கிய அங்கமாக உள்ளது.
”எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற ஒளவையின் சொல்லுக்கு ஏற்று ஆசிரியர் என்பவர் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுபவர்கள். மாணவர்களுக்கு நல்லொழுக்கம், பண்பாடு, அறிவு, கல்வி என அனைத்தையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். கல்வியை வழங்கும் ஆசிரியர் பணி என்பது புனிதமானதாகும். மாணவர்களின் அறிவுத்திறனையும், குணநலன்களையும் வடிவமைப்பதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
வரலாற்றை உருவாக்க எதிர்கால சன்னதியை சீரமைப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். ஒருவரிடம் நண்பனை, வழிகாட்டியை, பெற்றோரை, இறைவனை ஒன்றாக பார்க்க முடியும் என்றால், அது ஆசிரியர் மட்டுமே.
”மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற வாசகம் எல்லோருக்கும் நினைவிருக்கும். பெற்ற தாய் தந்தைக்கு பின்னர் குருவே, அதற்கு பின்னர் தான் தெய்வம் கூட என்று பொருள் தரும் இந்த வாசகம் முழுக்க முழுக்க உண்மை. நாளைய விஞ்ஞானியை, பொறியாளரை, கல்வியாளரை, எழுத்தாளரை, கலைஞரை, தலைவரை உருவாக்குவது ஆசிரியர்களே. நாட்டின் பொருளாதாரம் முதல் சமுகம் வரை ஒரு மனிதனின் அனைத்துக்கட்ட வளர்ச்சியிலும் ஆசிரியர்களின் பங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
“நமக்கு உலகை காட்ட நம்மை செதுக்கியவன் தாய்..
உலகிற்கு நம்மை காட்ட செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்!
ஆசிரியர் தின வாழ்த்துகள்..!
இந்த வரிகளுக்கு எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருத்தமான ஒன்று அம்மா இந்த வாழ்க்கையே வாழ காரணமாய் இருந்தாள். இந்த வாழ்கை எப்படி வாழ வேண்டும் என்பதை என் ஆசிரியர் கொடுத்தார். என்னை முழு வண்ணமாக மாற்றிய என் ஆசானுக்கு நன்றி….! இன்று ஆசிரியர் தினம் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மதிமுகம் குடும்பம் சார்பாக ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்…
– துர்கா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..