அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக மறுப்பு
அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்பப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பதவியேற்றவுடன் குறைகளை பதிவிடுக என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வருவதாக, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.