வேலூர்- நோய்களை அழிக்கும் (AntiBiotic) மருந்துகள் குறித்து விழிப்புணர்வு
வேலூரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் நோய்களை அழிக்கும் ஆண்டி பயாடிக் ( AntiBiotic) மருந்துகள் குறித்து விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வாழ்வியல் மருத்துவத்துறையின் சார்பில், நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி நோய்களை அழிக்கும் ஆண்டி பயாட்டிக்ஸ் மருந்துகளின் பயனும் நன்மைகளும் குறித்து விழிப்புணர்வு மாராத்தன் நடைபெற்றது.
இதனை வாழ்வியல் மருத்துவத்துறையின் தலைவர் மருத்துவர் சாமுவேல் ஹாண்ட்ஸ் டாக் துவங்கி வைத்தார். இதில் திரளான மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் திரளானோர் பங்கேற்று கொட்டும் மழையிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓடிவந்தனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.