இனி சாதாரண பட்டன் போனிலும் பண பரிமாற்ற வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆண்ட்ராய்டு செல்போனில் பணப் பரிமாற்றம் எளிதாக நடக்கிறது. ஆனால், இந்த செல்போன்களை வாங்க முடியாத சாதாரண மக்களால், இந்த டிஜிட்டல் சேவையில் பங்கேற்க முடியவில்லை.
முன்னதாக, சாதாரண செல்போன்களை வைத்துள்ள சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலான யுபிஐ டிஜிட்டல் நிதி சேவை விரைவில் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, நேற்று(மார்ச்.08) ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பட்டன் செல்போன் பயன்படுத்தும் 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு உதவ, புதிய யுபிஐ சேவையை அறிமுகம் செய்து வைத்தார்.இதற்கு ‘123 பே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கான 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணையும் தொடங்கி வைத்தார். இதற்கு `டிஜிசாதி’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த சேவை மூலம் சாதாரண செல்போன்கள் வைத்துள்ளவர்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் பங்கேற்க முடியும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.