ஹரியான சட்டசபை தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி..!
காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஹரியான சட்டசபை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தேர்தல் வெற்றிகொண்டாட்டத்தில் உள்ளார் போகாத்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவர் கண்ட பெரும் கனவு தகர்ந்து போனது. இந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக் 50 கிலோ எடைப்பிரிவு கொண்ட மல்யுத்த பிரிவில் 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் அந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களிடமும் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தங்கமா வெள்ளியா என்று நினைத்து இருந்த கணத்தில் இந்தியாவின் தங்க மகளின் கனவு தகர்ந்து போனது நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படித்தியது. தனக்கு மேற்கொண்ட போராட சக்தி இல்லை எனக்கூறி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு இந்திய சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜகவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரன்சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தருணம் இது
ஹரியானா தேர்தல் நடக்கும் சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது. இதனை நேர்த்தியாக பயன்படுத்தி மக்கள் மனங்களை வென்று விளையாட்டு களத்தில் விட்டால் என்ன தேர்தல் களத்தில் விட மாட்டேன் என வென்று காட்டி உள்ளார் வினேஷ் போகத்.