வட கொரியா வின் அதிபரும் சர்வாதிகாரியாவுமான கிம் ஜாங் உன் தனது மகளை முதன் முறையாக உலகிற்கு அறிமுகபடுத்தியுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும் இவர் தான் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரசாகவும் இருக்க கூடும் என்று கூறிவருகின்றனர்.
வட கொரியா வில் என்ன நடக்கிறது என்று மற்ற உலக நாட்டிற்கு எப்போதும் புரியாத புதிர் தான். அங்கு இருக்கும் மக்கள் எப்படியாவது தப்பித்து வெளியே வந்து அளிக்கும் பேட்டிகளில் தான் அந்த நாட்டை பற்றி தகவல் அவ்வப்போது வரும் அப்படி இல்லையெனில் வட கொரியா அரசாங்கம் அணு ஆயுத சோதனை நடத்தினால் வட கொரியா அந்த செய்தியை உலகிற்கு அறிவிக்கும் இந்த நாட்டில் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் தனது மகளை போது வெளியில் அறிமுகபடுத்தியுள்ளார்.
அடிக்கடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலகிற்கு அச்சுறுத்தி வரும் கிம் ஜாங் உன்னிற்கு உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த கண்டங்களுக்கு மிரட்டும் விதமாகவே அவரும் பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த அணு ஆயுத சோதனையின் போது தனது மகளை உலகிற்கு அறிமுகபடுத்தினார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எந்த ஒரு தகவலும் அறியப்படாத நிலையில் முதன் முறையாக தன் மகளை உலகின் முன் காண்பித்துள்ளார்.
இவருக்கு கடந்த 2012 ம் ஆண்டு திருமணம் ஆகி இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கபட்டாலும் அதிகார்வபூர்வமாக எந்த ஒரு தகவலும் கிம் ஜாங் உன் குடும்பத்தை பற்றி தெரியவில்லை மேலும் இவர்க்கு 3 குழந்தைகள் இருக்கலாம் என்றும் அறிமுகப்படுத்தபட்டுள்ள மகள் இரண்டாவது குழந்தையாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரை பற்றி அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட இவர்தான் கிம் ஜாங் உன்னின் அடுத்த அரசியல் வாரிசாக இருக்ககூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.