வரும் பொங்கலுக்கு அணைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்கவுள்ளது. இந்த பரிசுத்தொகையை கார்டுதார்களின் வங்கி கணக்கில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கும் பணியை முடிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்குகளின் மூலம் வழங்கவுள்ளது அதற்கு முன்னோட்டமாக பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்குகளில் செலுத்த கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்ட்கள் வழங்கப்படுகிறது. இதனால் வாங்கி எண்,ரேஷன் கார்டு எண், ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் மொத்தம் உள்ள 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களில் 14.60 லட்சம் மக்களிடம் வங்கி கணக்கு இல்லாத விவரம் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்கள்.பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்க வங்கி கணக்கு இல்லாத கார்டுதாரர்களுக்கு அருகில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.