ADVERTISEMENT
மழையினால் இடிந்து விழுந்த நெசவுத் தொழிலாளிக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது…
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே மழையினால் இடிந்து விழுந்த நெசவுத் தொழிலாளிக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக, ஒத்தவாடை தெருவில் வசிக்கும் நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் ஒரு பக்க சுவர் முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்தது.
இந்த நிலையில், வீடு இடிந்த சம்பவத்தை அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சம்பவ இடத்திற்கு சென்று மழையால் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் மற்றும் பண உதவியை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து நெசவாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது..
அதன் அடிப்படையில் மிக்ஜாம் புயலினால் சேதமடைந்த நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு அமைச்சர் காந்தி நேரடியாக சென்று கைத்தறி நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 லட்ச ரூபாய் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அவரிடம் வழங்கினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.