ரத்தன் டாடா பற்றிய ஒரு தொகுப்பு..!!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா இயல்பிலேயே அவர் ஏழைகளுக்கு உதவி செய்யும் குணத்தை கொண்ட ரத்தன் டாடாவின் கொடுத்த நன்கொடை, அவர் செய்த மனிதநேய செயல்கள் பற்றிய விபரம் பின் வருமாறு:
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து ரத்தன் டாடா மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி காலமானார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரத்தன் டாடா 1937 ம் ஆண்டு சூரத்தில் பிறந்தார்.
பின் இவர் அமெரிக்காவில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஸ்ட்ரெக்சரல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு டாடா நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
அதன்பிறகு டாடா சன்ஸ் தலைவராக 1991ம் ஆண்டில் பொறுப்பேற்று இந்திய தொழில்துறையில் அசைக்க முடியாத சக்தியாக மாறினார்.
ஏழைகளுக்கு எட்டாத கனியாக இருந்த சொந்த கார் என்ற கனவை மாற்றியமைத்தார்.
ரத்தன் டாடா சமுக சேவை பணி பற்றி ஒரு சிறு தொகுப்பு;
இவர் ரூ.1 லட்சத்தில் டாடா நானோ காரை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் ஆண்டுதோறும் நன்கொடைகளை அள்ளி கொடுத்தது மட்டுமில்லாமல்,பல்வேறு அறக்கட்டளைகளுக்கு டாடா நிறுவனம் சார்பில் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதில் ஏராளமானவர்கள் பயன்பெற்றனர்.
மேலும் இந்தியாவில் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாய துறைகள் மீது ரத்தன் டாடாவுக்கு தனி அக்கறை என்பது இருந்து வந்தது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், விவசாயத்துக்கு தேவையான உதவிகளை தனது நிறுவனம் மூலம் ரத்தன் டாடா வழங்கினார்.
மேலும் ரத்தன் டாடா படித்த கார்னெல் பல்கலைக்கழத்தில் இந்தியர்கள் அங்கு சென்று படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலருக்கும் உதவி புரிந்தார்.
சொந்த பணத்தை கார்னெல் பல்கலைழக்கத்துக்கு வழங்கி பலரது மேல்படிப்புக்கு உதவி செய்தார். மேலும் கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்காக நன்கொடை கொடுத்தார்.
மேலும் இவர் கொரோனா தீவிரமாக உள்ள நாட்களில் ரூ.500 கோடியை நன்கொடையாக தெரிவித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
மேலும் கொரோனா காலத்தில் தனது நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளத்தை முறையாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பெரும் கோடீஸ்வரராக இருந்தாலும் கூட ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் மீது அக்கறையுடனே வாழ்ந்து தனது சகாப்தத்தை முடித்து கொண்டவர் தான் ரத்தன் டாடா. இதனால் ரத்தன் டாடாவை தொழிலாளிகளின் முதலாளி என்றே பலரும் அழைத்தது குறிப்பிடத்தக்கது.