சென்னை முட்டுக்காடுல இத பார்த்தது உண்டா..? ஊரும் உறவும்-34
சென்னை முட்டுக்காடு தட்சிண சித்ராவில், தமிழ்நாடு, கேரளாவின் பல்வேறு வகையான வீடுகளைக் கட்டி இருக்கின்றார்கள். அதுபோன்ற ஒரு வீதி இந்த தங்கக் கோட்டையில் இருக்கின்றது.
ஒரே தெருவில் பல வீடுகளின் முகப்பைக் கட்டி இருக்கின்றார்கள். அங்கே பல கோணங்களில் நின்று வண்ணப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். நான் நிறையப் படங்களை முகநூலில் பதிவு செய்தேன் . நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
சுமார் இரண்டு மணி நேரம் உள்ளே சுற்றிவிட்டு, அருகில் உள்ள கிராமத்திற்கு வந்தோம். குளிர்ச்சியான மலைகளில் உலவுகின்ற பொழுது கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் தேநீர் பருகுவது எனக்குப் பிடித்தமானது. அப்படி, சூடாக ஒரு தேநீர் குடித்து விட்டுக் கீழே இறங்கினோம். 3 மணி ஆகிவிட்டது.
நேராக வாணியம்பாடி அகமதியா உணவகத்திற்கு அழைத்துச் சென்றார் சதீஷ். சென்னையில் உள்ள உயர்தர விடுதி போலக் கட்டி இருக்கின்றார்கள். சுமார் 30 க்கும் மேற்பட்ட கார்கள் நின்று இருந்தன. உள்ளே எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிந்தன.
நல்ல சுவையான பிரியாணி கிடைத்தது. ஒரு பிளேட் 310 ரூபாய்தான். சுவைத்தோம் மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் வந்து சேர்ந்தோம். இதுபோன்ற பயணங்களை அரசுப் பேருந்துகளில் மேற்கொள்ள முடியாது. தனியாக ஒரு கார் இருந்தால் தான் சுற்ற முடியும்.
இந்தப் பயணத்திற்கு உதவிய தம்பி சதீசுக்கு நன்றி. மாலையில் திருமண வரவேற்பை முடித்துக் கொண்டு, திருப்பத்தூரில் இருந்து தொடரியில் பயணித்து, நள்ளிரவு 2 மணி அளவில் ஈரோடு வந்து சேர்ந்தேன்.
Discussion about this post