ஹார்வர்டு பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு கருத்துகளை ஊக்குவிப்பதாகக் கூறியுள்ள, அந்நாட்டு அதிபர் டிரம்ப், அதற்கு அளித்து வந்த, 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்தினார்.
தற்போது இன்னொரு மிரட்டல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதன்படி, பல்கலைக்கழகத்திற்கு என வரி விலக்கு உரிமை இருக்கிறது என்றும், பொது விஷயங்களில் தலையிட்டால் அது பறிக்கப்பட்டு வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தன் எக்ஸ் பக்கத்தில், ‘ஹார்வர்டு ஒரு ஜோக் , படிப்பதற்கு டீசன்டான இடம் இல்லை. உலகின் தலைசிறந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழமாக கருதப்படுவதற்கான தகுதியை அது இழந்து விட்டது ‘என்றும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது மட்டுமல்ல பல்வேறு உலக விவகாரங்களை கண்டித்தும் இந்த பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்துவது வாடிக்கையாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த பல்கலையில் மாணவர்கள் போராட்டம் நடத்த தடை விதிக்கும்படி டிரம்ப் அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு ஹார்வர்டு பல்கலை நிர்வாகம் மறுக்கவே அதற்கு அளிக்கப்பட்டு வந்த 2.26 அமெரிக்க டாலர்கள் நிதியை அவர் நிறுத்தி விட்டார்.