கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ரவுடி மூலம் கொடுமை..!
சென்னை மயிலாப்பூர் பல்லாக்கு நகர் ஏ.எச் பிளாக் குடியிருப்பில் வசித்து வருபவர் லெனின் பிரகாஷ். இவரிடம் கமல் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.22 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த கடனுக்கான வட்டி தொகையும் அவர் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாய்த்தி வந்துள்ளார். இதனையடுத்து கமலிடம் கடன் தொகையை கேட்டு லெனின் பிரகாஷ் நெருக்கடி கொடுக்க தொடங்கினார்.
இந்த நிலையில், பிரகாஸ் சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் கமல் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அதை மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி பேசி கொண்டிருந்த போதே திடிரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பின்பக்கத்தால் லெனின் பிரகாசை தாக்கி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த லெனின் பிரகாஷ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி பிரகாஷ்சை கைது செய்துள்ளனர்.
மேலும் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட லெனின் பிரகாஸை ரவுடி செந்தில் மூலம் மிரட்டிய கமலை போலீசார் தேடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
-பவானி கார்த்திக்