மகளின் அந்த வீடியோவை வெளியிட்ட தந்தை.. மனமுடைந்த மகள்.. போலீஸ் விசாரணை..!
கர்நாடகாவில் 18 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் தன் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், இவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தந்தையே சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளார்.
இது தொடர்பாக பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி, மகள் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த உறவினரைக் காதலிப்பதாகவும் இது என் கணவருக்கு பிடிக்காததால் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து வந்த துன்புறுத்தினார்.
மேலும் அவரது தொலைபேசியில் இருந்து அனைத்து தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வலுக்கட்டாயமாக பதிவிறக்கம் செய்து சமூக ஊடகங்களில் தந்தை பரப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
தந்தையின் செயலால் மனமுடைந்த தனது மகள் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபைனிலை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் உடுப்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்