ஹத்ராஸ் போலோ பாபா விவகாரம்..!! 6பேர் மீது அதிரடி நடவடிக்கை..!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் ஆன்மீக கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஆன்மீக சொற்பொழிவாளர் “போலே பாபா” கடந்த ஜூலை 2ம் தேதி உரையாற்றியுள்ளார்.
அவரின் ஆன்மீக உரையை கேட்க திரளான பக்தர்கள் அதில் பங்கேற்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து பக்தர்க்கல் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர்..
அதில் சிக்கி அன்று ஒரே நாளில் மட்டும் குழந்தைகள், பெண்கள் என 122 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பின், மேலும் 28 பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவான போலி பாபாவை பிடிக்க போலீசார் முனைப்பு காட்டி வரும் நிலையில், போலே பாபா மீது வன்கொடுமை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டது. ஆக்ரா, எட்டாவா, ஃபருகாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களிலும் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதனிடையே ஜூனியர் என்ஜினீயர் தேர்வு எனப்படும் ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் போலே பாபாவுக்கு தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் மாநிலம் போலீசார் விசாரணை தொடங்கி இருந்தனர்.
வினாத்தாள் கசிவு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட ஹஷ்வர்தன் மீனா என்பவருக்கும் போலே பாபாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் வழங்கிய நிலத்தில் போலே பாபா ஆசிரமம் ஒன்றை நடத்தி வருவதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டிருந்தனர்.
அதன் பின் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 நபர் நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷால் திவாரி நேற்று தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி, அந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்.அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு நேற்று முன்தினம் தான் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். இதன் மூலம் அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
– லோகேஸ்வரி.வெ