புதிய 3 குற்றவியல் சட்டங்கள்..! தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!
மத்திய அரசு நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பிலும் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி ரயில் மறியல் போராட்டம் :
அந்த வகையில் இன்று மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், தர்மபுரி ரயில் நிலையம் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்கள் தேவையற்றது.இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இந்த சட்டத் திருத்தத்தில், சமஸ்கிருதம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மொழிப்பிரச்சிணை ஏற்படும். இதில் வழக்காடிகளுக்கும், பொதுமக்களுக்கு மிகுந்த சகரமம் ஏற்படும். எனவே இதனை உடனடகயாக திரும்ப பெற வேண்டும் என வலியுறத்தினர்.
மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெரம் வரை நீதிமன்றத்திற்கு செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்..
அதேபோல் திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர்.கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் முயன்றனர் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கறிஞர்களை தடுத்து நிறுத்தினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய வழக்கறிஞர்களின் சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அட்வகேட் அசோசியேசன் தலைவர். பூபேஷ், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர்.சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் ஒன்றாம் தேதி முதல் நீதிமன்றபணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுவதால் சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் எனவே இச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சேவைகள் வரித்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது போலீசாரின் தடுப்பை தாண்டி போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
– லோகேஸ்வரி.வெ