குஜராத்தில் அதிகமாக விற்பனையாகும் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில் இருந்து வெளி வருகிறது குஜராத் சமாச்சார் என்ற பத்திரிகை. லோக் பிரகாஷன் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த பத்திரிகையை வெளியிடுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநராக பாகுபலி ஷா என்பவர் உள்ளார். இவரது, சகோதரர் ஷ்ரேயன்ஷா குஜராத் சமாச்சார் பத்திரிகையின் மேனேஜிங் எடிட்டராக உள்ளார்.
இந்த நிலையில், பண மோசடி வழக்கில் அகமதாபாத்தில் ( இன்று மே 16) பாகுபலி ஷா கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மத்திய அரசு அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி மீடியாக்களை மிரட்டுவதா காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.