கடந்த 2016ம் ஆண்டு பிரதமரால் கொண்டு வரப்பட்ட உஜ்வலா திட்டத்தின் கீழ் இந்தியாவில் பயன் பெறும் ஏழை,எளிய மக்களுக்கு குஜராத் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
தீபாவளி பரிசாக உஜ்வலா திட்டத்தின் மூலம் சிலிண்டர் பெரும் மக்களுக்கு ஆண்டுக்கான இரு முறை இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் CNG மற்றும் PNG எரிவாயு விலையை 10% குறைப்பதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தொடர்ந்து இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் BJP கட்சி ஆளும் மாநிலத்தில் ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று அறிவித்துள்ளது.
Discussion about this post