நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் படு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் முதல் பாடல் எப்போ என்ற ரசிகர்களின் ஏக்கத்திற்கு இசையமைப்பாளர் தமன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பதில் அளித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்து,தெலுங்கு இயக்குனரான வம்சியின் இயக்கத்தில் உருவாகும் வாரிசு படம் கிட்ட தட்ட அணைத்து வேலைகளும் முடிந்து வரும் நிலையில், அப்படத்தை குறித்தான அப்டேட் எப்போ என்று ரசிகர்கள் தொடர்ந்து சமுகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வந்தனர். இந்நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாகும் என்ற தகவல் வந்தது,அதை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடப்படும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
தற்போது, இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் “தீபாவளி ” என்று குறிப்பிட்டுள்ளார்.இதனால் படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
மேலும்,படத்தை முடித்த வரை நடிகர் விஜய் பார்த்ததாகவும் அது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். அஜித் நடிக்கும் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுவதும் குறிப்பிடும் நிலையில் அதிக தியேட்டர் ஒதுக்க படும் என்ற பஞ்சாயத்தும் இப்போதே தொடங்கியுள்ளது