கிரானைட் கற்கள் முறைகேடு விவகாரம்..! அமைச்சர் சேகர்பாபு அளித்த உறுதி..!
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தவறான முறைகேட்டில் யார் ஈடுப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு பேட்டி :
சென்னை, கீழ்ப்பாக்கம், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்டார். அதன் பின் அருகில் உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை சமன்படுத்தி மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவது குறித்து எழுந்த தகவலின் பேரில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., திருக்கோவில் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகிறது.. அதில் 22,247 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்கு வாடகையை செலுத்த முடியாத நிலையில் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த இடம் திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவர்களுக்கான வசதி :
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்ட முதலமைச்சர் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை படிப்பை தொடர இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு ஜீன் மாதம் தொடங்கப்பட்டது.
இப்பள்ளியில் 1,153 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இதுவரை 1 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 11.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 32 வகுப்பறை கட்டடங்கள், ஆசிரியர்கள் அறை மற்றும் 5 ஆய்வகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்த கல்வியாண்டிற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலம் ஆக்கிரமிப்பு :
இந்த இடமானது 7.5 ஏக்கர் ஆகும். அதில் பள்ளியானது 2.8 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. மீதமுள்ள 4.7 ஏக்கர் பரப்பிலான அந்நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அதனை சமன்படுத்தி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் மாற்று பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
இந்து சமய அறநிலையத்துறையில் அறம் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இக்கோவில் சார்பில் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
திருக்கோவில் சொத்து ஆக்கிரமிப்பு :
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களுக்கு சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளது. அவற்றை அளவீடு செய்து பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோவர் கருவிகள் மூலம் இதுவரை 1,69,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது..
6,076 கோடி மதிப்பீலான திருக்கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கிப்பட்டதில் இருந்து., இப்பணிக்காக 38 மாவட்டங்களுக்கும் வட்டாட்சியர்கள் மற்றும் நில அளவையர்கள் மாற்று பணியில் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசு முடிவு :
இந்நிலையில் கடந்த 24ம் தேதி நானும், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய், சுரங்கத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தோம். அந்த ஆய்வு குறித்த அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றிய அரசு :
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒன்றிய அரசு மாற்றான் தாய் பிள்ளையை பார்ப்பது போல பார்க்கிறது.. வேற்று மனப்பான்மையோடு நடந்து கொண்டிருக்கிறது.. இது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்..
அக்கூட்டணியில் இருக்கின்ற கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்தே அதற்கு சாட்சியாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்கு போராடி வருகிறார்கள்.
முதலமைச்சரும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றார். இந்த போராட்டத்திற்கான வெற்றி விரைவில் கிடைக்கும் என இவ்வாறே அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..