குழந்தையின் மீது கொதிக்கும் பால்.. பரபரப்பான பழைய வீடியோ தற்போது வைரல்..
பொதுமக்கள் மத்தியில் மாற்றப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று மூடநம்பிக்கைள். மதத்தின் பெயரால், கடவுளுக்கு செய்துக் கொள்ளும் காணிக்கை இது என்ற பெயரில், பலரும் பல்வேறு விதமான மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் கிடக்கின்றனர்.
இந்த 22-ஆம் நூற்றாண்டிலும், இப்படியான சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளது. இந்த மூடநம்பிக்கைகளின் உச்சமாக, தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய வடமாநிலங்களில், காசிதாஸ் பாபா பூஜை என்ற திருவிழா, கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இவ்விழாவின்போது, பச்சிளங் குழந்தையின் மீது கொதிக்கும் பாலை, அங்கிருந்த பக்தர் ஒருவர் ஊற்றியுள்ளார்.
இதுதொடர்பான பழைய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை, இப்போது புதிதாக பார்த்த நெட்டிசன்கள், கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்