இந்திய நாட்டின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.
செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளம் வயது நபர் என குகேஷ் ஆவார். கடந்த 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றார். இந்நிலையில், இந்திய செஸ் வீரர்களில் முதலிடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். தனது ஆஸ்தான வழிகாட்டி விஸ்வநாதன் ஆனந்தை இதன் மூலம் அவர் முந்தியுள்ளார்.
செப்டம்பர் மாதத்துக்கான உலக தரவரிசையில் 2,758 ரேட்டிங் உடன் எட்டாம் இடத்தில் உள்ளார். அண்மையில் முடிந்த செஸ் உலகக் கோப்பை தொடரில காலிறுதி போட்டி வரை அவர் முன்னேறி இருந்தார். தற்போது உலக தரவரிசையில் டாப் 10-ல் இடம் பிடித்துள்ள அவர், கொரோனா தொற்றின் போது செஸ் விளையாட்டு சார்ந்த முக்கிய அம்சங்களில் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவுடன் கவனம் செலுத்தினார். அதன் பலனாக உலக தரவரிசையில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டார். டாப் 25, டாப் 10 இடங்கள் என தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார்.
உலக தரவரிசையில் டாப் 25-ல் இடம் பிடித்துள்ள இந்தியர்கள்
- குகேஷ் (8-ம் இடம்)
- விஸ்வநாதன் ஆனந்த் (9-ம் இடம்)
- பிரக்ஞானந்தா (19-ம் இடம்)
Discussion about this post