இடியமின் சொன்ன அடுத்த அப்டேட்..!! 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு..!!
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் சாலை எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சேலம் பேருந்து நிலையத்திலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருப்பதால்.., பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாப்பேட்டை, சோளிங்கர், ரத்தினகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தருமபுரியில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சிங்கப்பெருமாள்கோவில், மாமண்டூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம், கரிசல்பட்டி, ஆலம்பட்டி, மேலக்கோட்டை, வடகரை, கப்பலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. தஞ்சையில் நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பாபநாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் மிதமான மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 2 மணி நேரம் பெய்த மழையால், சாலைகள் எங்கும் நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு இரவு வாய்ப்பு இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..