93 வயதில் டேட்டிங் சென்ற பாட்டி..! யாருடன் தெரியுமா ?
வெளிநாட்டை சேர்ந்த 93 வயது பாட்டி ஒருவர். வீட்டில் இருந்து செய்யும் செயல்களை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.
இதன் மூலம் ஆண் நண்பர் ஒருவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி பழகியுள்ளனர். ஒரு நாள் என்னுடன், டேட்டிங் வர முடியுமா என்று ஆண் நண்பர் கேட்டுள்ளார். அதற்கு பாட்டியும் சரி என்று சொல்லி இருக்கிறார்.
பின் இன்ஸ்டாகிராமில், பாட்டி ஒரு போட்டோவை போட்டு. 25 வருடங்கள் கழித்து நான் டேட்டிங் செல்ல போகிறேன். என் நண்பர் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவார். அதற்காக தான், நான் தயாராகி கொண்டு இருக்கிறேன் என போஸ்ட் செய்துள்ளார்.
இதனை பார்த்த பலரும் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். நெட்டிசன் கள் சிலர் “93 வயது பாட்டி, என்றும் பியூட்டி..” என்றும் அவரின் புகைப்படத்தை வடிவமைத்து போஸ்ட் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த பாட்டி டேட்டிங் சென்று திரும்பிய அனுபவத்தை வீடியோவாக பேசி பதிவிட்டுள்ளார். என் ஆண் நண்பர் என்னிடம் சரியாக நடந்துக்கொள்ளவில்லை. “என்னை அழகு என்று வர்ணிக்க வில்லை, ஹோட்டல் சென்ற பொழுது எனக்காக கதவை திறந்து விட வில்லை, ஒரு முத்தம் கூட கொடுக்கவில்லை, நான் கொடுத்த போதும் மறுத்து விட்டார்” என வருத்தமாக பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், நல்ல வேலை உங்க “லிப்ஸ்டிக்” கலையவில்லை என நினைத்துக் கொள்ளுங்கள், என கமெண்ட் செய்துள்ளனர்.
அதை சிலர் மீம் ஆகவும் பதிவேற்றியுள்ளனர். இன்னும் சிலர் அவருக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.

















