ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பயணம் உத்திர பிரதேசத்தை சென்றடைந்துள்ளது. இந்நிலையில் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில் என் சகோதரர் ராகுல் காந்தியின் மாண்பை சிதைப்பதற்கு மோடி அரசு பல கோடிகளை செலவழித்து வருவதாக கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் 100 நாட்களுக்கும் மேல் கடந்து தற்போது உத்திரபிரதேசம் சென்றடைந்துள்ளது. கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான இந்த பாத யாத்திரை சுமார் 3000 கிமீ மேல் நிறைவடைந்து தொடர்கிறது. புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளால் 9 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் இன்று முதல் யாத்திரை தொடங்கியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் தொடங்கும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அவரை வரவேற்றனர்.
இதற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரியாங்க காந்தி பேசுகையில், தனது சகோதரர் ஒரு போராளி அவரை நினைத்து தான் பெருமை படுத்துவதாகவும் ஒன்றிய அரசின் தலைவர்கள் மற்றும் பொதுத்துறையை அம்பானி அதானி போன்ற பணக்காரர்கள் வாங்கியிருக்கலாம் ஆனால் தனது சகோதரரை வாங்க முடியாது என்று பேசினார். மேலும் அவர் பேசுகையில், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாத அரசியலால் மக்களின் பொருளாதார பிரச்சனைகள் தீராது என்றும் மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்காது என்றும் கூறினார்.
மேலும் தனது சகோதரர் உன்மையின் பாதையில் பயணிப்பதாகவும், அவரை நினைத்து தான் பெருமை படுவதாகவும் கூறிய அவர் தன் சகோதரர் மாண்பை சிதைக்க மோடி மற்றும் அவரது அரசு பல கோடிகளை செலவழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Discussion about this post