ஒடிசாவில் ஏற்கவே இரண்டு ரசியர்கள் இந்தியாவிற்கு சுற்று பயணமாக வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் விசாரணையில் இருக்கையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த மற்றொருவரின் உடல் சடலமாக கண்டறியபட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 3 ரசியர்கள் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் பாவெல் ஆண்டோவ், மற்றும் அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ் உள்ளிட்டோர் சுற்றுலாவுக்காக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். ராயகடா மாவட்டம் என்பது மலைகள் சூழ்ந்த பிரதேசம் அதுவொரு பழங்குடி மக்கள் பகுதியாகும். அதில் பாவெல் ஆண்டோவ் என்பவர் ரசியா அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர்.
அவர், உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கு எதிராக புதினை விமர்சித்து வந்தார் என்பது குய்ப்பிடத்தக்கது, இந்நிலையில் அவர் தங்கியுர்ந்த விடுதியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அடுத்த சில நாட்களில் அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ்வும் உயிரிழந்தார் இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து மும்பை வரை எம்.பி.
அல்ட்னா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்தது அப்பொழுது கப்பலில் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்த மில்யாகோவ் செர்கேய் என்ற நபரின் உடல் அந்த கப்பலில் அதிகாலை 4 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்கையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்படும் ரஷ்யர்களின் தொடர் மரணம் பெரும் சர்ச்சையையும் மற்றும் மர்மத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
Discussion about this post