அரசு மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்லி தண்டனை..!! தலைமை ஆசிரியர் நீக்கம்..!!
தொடர்ந்து வீட்டு வேலைகள் மற்றும் பள்ளியின் கழிவறைகளை சுத்தம் சொல்லும் தலைமை ஆசிரியர்-தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி ஊர் பொதுமக்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் சிந்தகமானி பெண்டா கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலையரசி பணியாற்றி வருகிறார்.
மேலும் பள்ளியில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், திறமை வாய்ந்த ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
மாணவர்கள் என்றாலே வகுப்பிற்கு தாமதமாக வருவது, சில சில சேட்டைகள் செய்வது வழக்கம்.., ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் புகட்டும் ஆசிரியராக இருப்பது மட்டுமின்றி ஒரு நண்பராகவும் பழகி வருவார்கள்.
மாணவர்கள் தப்பு செய்தால் அவர்களை திருத்துவது ஆசிரியரின் வேலை அந்த வகையில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களின் சொந்த வேலைக்காக பயன் படுத்திக் கொள்ளுவார்கள், அதேபோல் இங்கும் ஒரு தலைமை ஆசிரியர் அந்த செயலை செய்துள்ளார்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கலையரசி, பள்ளி மாணவ மாணவிகளை தனது சொந்த வேலைகளுக்கு பயன் படுத்தியுள்ளார். ஒரு மாணவனை சொந்த வேலைக்கு பயன் படுத்திக்கொள்வதே தவறு, அதிலும் பள்ளியின் கழிவறைகளையும் சுத்தம் செய்ய சொல்லுவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ச்சியாக இந்த செயல் அந்த பள்ளியில் நடந்து வந்துள்ளது.., அதை ஏற்றுக்கொள்ள முடியாத மாணவர்கள். அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர், இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் சென்ற பெற்றோர்கள், தலைமை ஆசிரியரை சந்தித்து பேசியுள்ளனர்.
அதையெல்லாம் பொருட் படுத்தாத கலையரசி மீண்டும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்துள்ளார், அதில் ஆத்திரமடைந்த பெற்றோர்கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், கலையரசியை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு இன்று மனு அளித்துள்ளனர்.
மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று மாணவர்களுக்கு ஆதரவாக பேசி அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
Discussion about this post