கட்டட சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி..!!
வாணியம்பாடி அருகே பம்பு செட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி. இருவர் படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இன்று காலை வடக்குபட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் உட்பட 5 பேர் பம்புசெட் கட்டிடம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கட்டிடத்தின் சுவர் ஒன்று திடீரென வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. அதில் விக்னேஷ் மட்டும் சுவற்றின் இடுப்பாடுகளில் சிக்கி கொண்டுள்ளார்.., சுவர் இடிந்து விழுந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், சுவரில் சிக்கி கொண்டவர்களை மீட்டுள்ளனர்.
ஆனால் விக்னேஷ் சுவரின் அடியில் சிக்கி கொண்டதால் அவரை விரைவில் மீட்க முடியாமல் போய் விட்டது எனவே விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது, தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு
வந்த அம்பலூர் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின் இறந்த விக்னேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த இருவரும் சிகிச்சை பிரிவில் இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கின்றார்கள்.., சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post