குழந்தை கடத்தலில் சிக்கிய அரசு மருத்துவமனை ஊழியர்..! பின்னணியில் வெளிவந்த பல திடுக்கிக்கிடும் தகவல்..! உஷார் மக்களே..!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரரான சமதர்மன் (வயது 46) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று காவலர்கள் நடத்திய சோதனையில் செவிலியரின் உதவியாளராக பணிபுரிந்து வந்த அதியமான் (வயது 39) என்பது தெரியவந்தது.. அதனை அடுத்து ராணுவ வீரரின் மனைவி மற்றும் குழந்தையை மீட்டனர்.
பின் அதியமானிடம் நடத்திய சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது… தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை குறிவைத்து மெல்ல பேச்சு கொடுத்து நோயாளி யார், என்ன உறவுமுறை வேண்டும் என முதலில் விசாரித்து கொண்டு.
பின் அவர்களிடம் எதாவது மருத்துவ உதவி உள்ளிட்ட உதவி தேவைபட்டால் தன்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி தனது செல்போன் எண்ணை பெண்களுக்கு கொடுத்து தந்திரமாக பேசி அரசுத்துறைகள், நீதிமன்றங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.
பின் அவர்களிடம் இருந்து இலட்ச கணக்கில் பணம் பறித்துக்கொண்டு, அதில் நம்பி ஏமாறும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதை அதியமானின் தனி ஸ்டைலாக வைத்துள்ளார். அப்படி வீழ்த்தப்பட்டவர் தான் இந்த இராணுவ வீரரின் மனைவி. தன்னை செல்போனில் தொடர்பு கொள்ளும் பெண்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தும் அதியமான்,
பின்னர் பெண்களிடம் செல்போனில் அடிக்கடி பேச்சு கொடுத்து தனது தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்டவைகளை பொய்யாக கூறி நம்பவைத்தும், தனக்கு அரசு உயர் அதிகாரிகள், உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களை பலரை தெரியும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமானால் கூறுங்கள், தங்களுக்கும் நல்ல கமிசன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி நம்பவைத்துள்ளார்.
இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோதுன்ற ஆட்கள் யாரவது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டால் நம்பி ஏமார்ந்து விட வேண்டாம் என காவலர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..