சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள கூகுள்..!! அமெரிக்க நீதிபதி அதிரடி அறிவிப்பு..!!
“கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது” என அமெரிக்க நீதிபதி தெரிவித்துள்ளார் .
ஆன்லைன் தேடலில், கூகுள் நிறுவனம் 90 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்க, சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2020ல் அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது வழக்குத் தொடர்ந்தது. இது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முக்கிய வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த வழக்கு ஓராண்டுக்கும் மேலாக, நிலுவையில் இருந்து வந்துள்ளது . இந்நிலையில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா தீர்ப்பு அளித்தார். இதனை தொடர்ந்து அவர் அளித்த 277 பக்கம் கொண்ட, தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம், தேடல் சேவையில் ப்ரவுசரில் 90 சதவீதத்தையும், மொபைல்களில் 94.9 சதவீதத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது உண்மை என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்மார்ட் போன்களிலும், பிரவுசர்களிலும் தனது தேடுபொறி, ‘டிபால்ட்’ ஆக நிறுவப்படுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் அள்ளிக்கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தும் சூழலை இந்த தீர்ப்பு உருவாக்கியது எனவும் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக, கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா அரசு வழக்கறிஞர் கூறியதாவது அமெரிக்க மக்களுக்கு இது ஒரு வரலாற்று வெற்றி என தெரிவித்தார் .மேலும் பேசிய அவர் எத்தகைய செல்வாக்கு கொண்டதாக இருந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், எந்த நிறுவனமும் சட்டத்திற்கு மேலானது இல்லை என்பது இந்த தீர்ப்பு மூலம் தெரியவந்துள்ளது. இதனால் கூகுள் தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ள அதிக பணம் செலவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் …
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..