தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (ஏப்ரல் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 5,642 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 45,136 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 6,109 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 48,872 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 50 காசுகள் குறைந்து 80 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவிற்கு 500 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.