”பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை வையுங்கள்”… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
கடலூர் திமுக கவுன்சிலர் சரத் – நிவேதிதா தம்பதியினரின் திருமணம் புதுச்சேரியில் இன்று (ஆக.30) நடந்தது. இத்திருமணத்தை திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய அவர் ஒரு காலத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே வரவும் உரிமையும் . படிப்பதற்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நிலையை மாற்றி மாற்றத்தை கொண்டு வந்தது திராவிட இயக்கம் திமுக தான்.
மகளிருக்கு சொத்தில் சமவுரிமை என இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதிதான். தற்போது மகளிர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என திட்டம் கொண்டு வந்ததன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 520 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். இதனால் மாதம் ஆயிரம் ரூபாய் வரை தமிழகத்தில் மகளிர் சேமிக்கின்றனர்.
பல திட்டங்களால் உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் தினமும் பயன்பெறுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கிய ஓராண்டில் 1.16 கோடி பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணிக்குச் செல்லும் பெண்கள் 42 சதவீதமாகவுள்ளனர். மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒருவர் மற்றவரை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் பிறக்கும் குழந்தைக்குகளுக்கு நல்ல தமிழ் பெயரை வையுங்கள் என்று பேசியுள்ளார்.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”