பிரதமருக்கு பாதுகாப்பு கொடுங்கள்..! பக்தர்களை வெளியேற்றாதீர்கள்..! மஹாபெரியவா..!
“இங்கு வரும் பக்தர்களை வெளியேற்றுவதற்கு யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை” – பெரியவா
அப்போதைய பாரதப் பிரதமர் நரசிம்மராவ், (இன்று அவர் பிறந்த தினம்) காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்கு வருவதாகத் தகவல் வந்தது. வழக்கம்போல் பெரியவாளை மொய்த்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள்.
காவல்துறைப் பணியாளர்கள் பெரியவா பக்கத்தில் இருந்த பக்தர்களைத் துரத்தினார்கள்.
“பிரதம மந்திரி வர்றாங்க… எல்லோரும் வெளியே போங்க” என்று கூச்சல்.
பார்த்துக் கொண்டிருந்த பெரியவா, ஒரு காவல் துறை அதிகாரியைக் கூப்பிட்டார்….
“இந்த பக்தர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
இவர்களை இங்கிருந்து வெளியேற்ற உங்களுக்கு அதிகாரம் இல்லை. இது ஸ்ரீமடம். பிரைவேட் பிராப்பர்ட்டி, வெளியே துரத்தப் பட்டவர்களை எல்லாம் உள்ளே அனுப்புங்கள்.
பிரதமருக்கு செக்யூரிட்டி கொடுப்பது தான் உங்கள் டியூட்டி. பிரதமர் வரும்போது, அவரை ஜாக்கிரதையாக அழைத்து வாருங்கள்.
அது போதும். ஸ்ரீமடம் பக்தர்களை வெளியேற்றுவதற்கு உங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை” என்று திட்டவட்டமாகச் சொன்னார்கள் பெரியவா.
பெரியவாளுக்குப் பக்தர்களிடம் அவ்வளவு வாத்ஸல்யம். எல்லை மீறின சலுகை, யாருக்கும் கிடையாது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..