காதலியின் ஆபாச வீடியோ.. ப்ளாக் மெயில் செய்த காதலன்..போக்சோவில் கைது..!
தாராபுரம் அருகே உள்ள மூலனூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் இவருக்கும் கரூர் மாவட்டம் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற 27 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நட்பாகி நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி தனது காதலை வளர்த்து வந்தனர்.
அப்போது திடீரென விக்னேஷ் அந்த சிறுமியிடம் நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்புமாறும் அதை பார்த்துவிட்டு உடனே டெலிட் செய்து விடுவதாகவும் கூறியிருக்கிறார். அவர் கூறியதை நம்பி சிறுமி வீடியோவும் எடுத்து அனுப்பியுள்ளார்.
ஆனால் இந்த வீடியோவை பார்த்த விக்னேஷ் தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். அதாவது அந்த வீடியோவை வைத்து கொண்டு அந்த சிறுமியிடம் தனது ஆசைக்கு இனங்குமாறும் தன்னை உடனே திருமணம் செய்துகொள்ளுமாறும் மிரட்டியுள்ளார்.
மேலும் அப்படி செய்யாவிட்டால் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
உடனே தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விரைந்த சிறுமியின் பெற்றோர் விக்னேஷ் மீது புகார் அளித்தனர். புகாரில் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த மகளிர் போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”