கருவளையம் நீங்கி முகம் அழகாக – இதை ட்ரை பண்ணுங்க
நம் முகத்தின் அழகை பெரிதும் வெளிப்படுத்துவது கண்களும், புன்னகையும் தான். ஆனால் அந்த கண்ணங்களில் கருவளையம் வந்தால்? முகத்தின் அழகை கெடுத்துவிடும். அதை சரி செய்வதும் மிக சுலபம் தான். இதை மட்டும் செய்து பாருங்கள்.
கருவளையம் வந்தால் மருத்துவரை அணுகி, ஆலோசனை கேட்கும் அளவிற்கு பெரிதான ஒன்று அல்ல. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எளிதாக சரிசெய்து செய்துவிடலாம்.
கருவளையம் வருவதற்கான முதல் காரணம் தொடர் தூக்கம் இல்லாமல் இருப்பது தான். நீண்ட நேரம் தூங்காமல் முழித்து கொண்டு இருப்பது. அதிக நேரம் செல்போன் உபயோகிப்பது போன்ற செயல்கள் தான் காரணம்.
இதனால் இரத்த சோகை போன்ற நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதை சரி செய்ய, வாரத்தில் மூன்று முறையாவது, இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை எடுத்து கருவளையம் உள்ள இடத்தில் விட்டு மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை சிலருக்கு ஏற்றதாக இருக்காது அவர்கள் வெள்ளரிக்காய் துண்டை எடுத்து கண்களில் 25நிமிடம் வைத்து கொள்ளலாம்.
க்ரீன் டீ பையை எடுத்து, கண்களில் ஒத்தரம் கொடுக்கலாம். அப்படி செய்தால் உடனடியாக கருவளையம் மறைந்து விடும். இல்லையெனில் நன்கு குளிரூட்டப்பட்ட பாலை வைத்து மசாஜ் செய்யலாம்.
இவ்வாறு செய்தால் கருவளையம் காணாமல் போகிவிடும்
Discussion about this post