விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜய் மற்றும் அஜித்தின் அடுத்த படங்களை இயக்கும் இயக்குனர்களான விக்னேஷ் சிவன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தனியார் யூட்யூப் சேனலுக்கு நேர்காணலில் கலந்து கொண்டனர். அப்போது அவர்களின் அடுத்த படம் குறித்தான தகவலை பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும், 8 ஆண்டுகள் கழித்து இவர்களின் படம் வெளியாகுவதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இரண்டு படங்களின் ப்ரோமோஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இவர்களின் அடுத்த படங்களை இயக்கும் இயக்குனர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.
அதில் இயக்குனர் லோகேஷ் பேசுகையில், இதற்கு முன்பு தன இயக்கிய மாஸ்டர் திரைப்படம் இயக்குனர் படமாக 50% மாஸ் ஹரோவின் கமெர்சியல்காக 50% என்று இயக்கியதாகவும் அந்த படத்தை இயக்கும் பொழுது எனக்கு போதுமான நேரம் இல்லை என்றும் பேசிய அவர் விக்ரம் படம் இயக்கும் போது கொரோனா ஊரடங்கால் தனக்கு அதிகமான நேரம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும், தான் இயக்கும் அடுத்த படம் 100% தன்னுடைய பாணியில் இருக்கும் என்று கூறினார்.
இவரை தொடர்ந்து விக்னேஷ் சிவன் பேசுகையில், லோகேஷ் ஒரு ஆக்சன் கலந்த படங்களை எடுப்பதால் அவருக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எடுப்பதில் எளிதாக இருக்கும். ஆனால் தன்னுடைய கதையம்சங்களில் சண்டை காட்சிகள் பெரிதும் இருக்காது மேலும் ak 62வில் எனக்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது அதனால் தன்னால் எந்த அழுத்தமுமின்றி நன்றாக எடுத்து முடிக்க முடியும் ன்று நம்புவதாகா கூறினார். மேலும் AK 62 மற்றும் தளபதி 67 இந்த படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்ற பேச்சுகளும் இப்போது தொடங்கியுள்ளது. இரு படங்களின் பட பிடிப்புகளும் வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.