நயன்தாராவுடன் ஜோடி சேரும் கவின்..! அட இயக்குநர் இவரா..!!
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரேயினாக நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர் ரஜினி, விஜய் சூர்யா, தனுஷ் என பல முன்னனி நடிகர்களின் ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். லேடி சூப்பர் என்று அழைக்கப்படும் இவர், பெண்களை மையமாக கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் லிப்ட், டாடா, ஸ்டார் ஆகிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமிபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்தை தொடர்ந்து கவின் தற்போது மூன்று திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறுபடுகிறது. இதனை தொடர்ந்து நயந்தாராவுடன் கவின் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவலின்படி லியோ, டாடா படத்தி்ன் பாடல்கள் எழுதிய விஷ்ணு எடவன் இப்படத்தின் அறிமுக இயக்குனராக பணிபுரிய உள்ளார். மேலும் 7 ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் கவின் நடிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.
– பவானி கார்த்திக்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..