அஜித் ஒரு நன்றி கெட்டவர்..! அஜித்துக்கு இதயம் இருக்கா..? இல்லையா..? பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி..!!
தயாரிப்பாளர் மாணிக்கம் நாரயணன் :
முன்னனி தயாரிப்பாளர்களின் ஒருவர் மாணிக்கம் நாரயணன். இவர் முன்தினம் பார்த்தேனே, மாண்புமிகு மாணவன், இந்திரலோகத்தில் நான் அழகப்பன், வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
அதில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது தயாரிப்பதில் இருந்து விலகி இருக்கும் அவர் அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷ், ஐஸ்வர்யாவை பற்றி பேசி பரபர்பை கிளப்பிய நிலையில் தற்போது அஜித் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு அளித்திருந்த பேட்டியில், “நான் தயாரிப்பாளராக பீக்கில் இருந்த போது எனக்கு ஒரு படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி அஜித் அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் படமும் நடித்துக் கொடுக்கவில்லை பணத்தையும் கொடுக்கவில்லை. அஜித் ஒரு நன்றி கெட்டவர்” என்று காட்டத்துடன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மோதும் விஜய் அஜித் படங்கள்..! அதுவும் அந்த 2 படம்..!!
உச்ச நட்சத்திரமான அஜித் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடையாத சூழலில் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
சமிபத்தில் தான் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது. இந்த போஸ்டரில் அஜித்தின் மிரட்டலான புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டது.
மாணிக்கம் நாரயணன் அளித்த பேட்டி :
யூட்யூப் சேனல் ஒன்றுக்கு மாணிக்கம் அளித்த பேட்டியில் அஜித்தும், மகிழ் திருமேனியும் இணைந்திருக்கும் படத்துக்கு விடாமுயற்சி என்று அழகான பெயர் வைத்திருக்கிறார்கள். அதனால் படத்தையும் பெரும் முயற்சிக்கு பிறகு தான் முடிப்பார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் மகிழுக்கு இதயமே கிடையாது. அவரால் தயாரிப்பாளர்தான் உடைந்து சாவார். அஜித்துக்கு இதயம் இருக்கா..? இல்லையா..? என்பது பற்றி எனக்கு தெரியாது.
தனுஷ், சூர்யா, கமல் போன்ற பல முன்னனி நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறியதால் சினிமாவில் எத்தனை தயாரிப்பாளர்கள் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்று.. பலருக்கும் தெரியும்.
டார்ச்சர் செய்து பழகிய அஜித் :
அஜித் எப்போதுமே தயாரிப்பாளராக மாறமாட்டார். அவர் மிகப்பெரிய புத்திசாலி. அவர் மற்றவர்களை டார்ச்சர் செய்தே பழகிவிட்டார். அஜித் எப்போதுமே தயாரிப்பாளரிடமிருந்து பணத்தை முன்னதாகவே வாங்கிக்கொள்வார். என்று பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் செம கடுப்பாகி உள்ளனர்.
– பவானி கார்த்திக்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..