குளுகுளு முழாம்பழ ஃபலூடா..!
முலாம்பழம் – 1
சர்க்கரை – 2 தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள்
சப்ஜா விதைகள் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
வேகவைத்த சேமியா
வெண்ணிலா ஐஸ்கிரீம்
பிஸ்தா நறுக்கியது
பாதாம் நறுக்கியது
தண்ணீரில் சப்ஜா விதைகளை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
சேமியாவை வறுத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
முலாம்பழத்தை விதைகள் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
மிக்ஸியில் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கண்ணாடி பாட்டலில் ஊறிய சப்ஜா விதைகளை டம்ளரில் போட்டு அதன் மேல் சேமியாவை வைக்கவும்.
அதற்கு மேல் முலாம்பழச் சாற்றை ஊற்றி அதன் மேல் ஐஸ்கிரீம் ஒரு கரண்டி வைக்கவும்.
நறுக்கிய உலர் பழங்களை இதன் மேல் வைத்து அலங்கரிக்கலாம்.
அவ்வளவுதான் குளுகுளு முலாம்பழ ஃபலூடா தயார்.