மக்களுடன் முதல்வர் திட்டம்.. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு..!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்த முகாமில் பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை கல்வி உதவித்தொகை மகளிர் உரிமைத்தொகை மருத்துவகாப்பீட்டு திட்டம் என மொத்தம் 317 மனுக்கள் பெறப்பட்டது.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பத்தூர் திமுக மாவட்ட செயலாளருமான தேவராஜ் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். மேலும் உடனடியாக தீர்வு காணப்பட்ட 15 மனுக்களுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பயனாளிகள் ,பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”