பானிபூரிகளை விற்றால் கிரிமினல் வழக்கு..! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அதிரடி அறிவிப்பு..!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தள்ளுவண்டி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு கடைகளாகச் சென்று கடைகளுக்கு லைசன்ஸ் இருக்கிறதா என்பதை கேட்டறிந்து. மேலும் பானிபூரி, மசால், chat items சுகாதாரமான முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.
சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சதீஷ்குமார், “கர்நாடகாவில் உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பானிபூரியிலிருந்து மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டதில் பானிபூரியில் ரசாயனப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
அதன் பின் தமிழகத்திலும் சோதனை செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது. தமிழக அரசின் உத்தரவின் படி.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி சாப்பிடும் நிலையில் கலப்படம், ரசாயனப் பொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக சோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பானிபூரி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் 3 குழுவாக பிரிந்து ஆய்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.
தெருக்கடைகள், சாட் (chat) கடைகள், பெரிய கடைகள் என மூன்றாக பிரித்து அனைத்து வகையான கடைகளிலும் ஆய்வு செய்யப்படும்.
அந்த ஆய்வு முழுமையாக முடிய 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக்கொள்ளும். மேலும், ஆய்வு செய்யும் போது எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு. முடிவுகள் வர 5 முதல் 10 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும். பானிபூரி கடைகள் எவ்வாறு நடத்த வேண்டும் என பயிற்சிகள் வழங்க இருக்கிறோம்.
அதன் பின் ஆய்வின் முடிவில் பானிபூரி அல்லது அதற்காக பயன்படுத்தும் ரசம் (பானி) சுகாதாரமாக இல்லை என்றால் உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும்.
மக்கள் சுகாதாரமான பானிபூரிகளை உட்கொள்ளலாம். குறிப்பாக, கையுறை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் அளிக்கப்படும் பானிபூரிகளை சாப்பிடலாம். மேலும், பானி லைட் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். அதிக பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது” என தெரிவித்துள்ளனர்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..