இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… மேலும் இரண்டு பேர் கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, பாப்பாநாட்டை சேர்ந்தவர் 23 வயதாகும் பட்டதாரி இளம் பெண் சென்னையில் பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கவியரசன், திவாகர், பிரவின் மற்றும் 17வயது சிறுவன் ஆகியோரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவியரசன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த, பட்டுக்கோட்டை தலைமை அரசு மருத்துவருக்கு விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதியாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாக செயல்பட்ட, பாப்பாநாடு காவல் நிலைய பெண் எஸ்.ஐ. சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது மேலும் வேல்முருகன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்