அமெரிக்கா ஜனநாயகத்தை காப்பாற்ற போவது..!! எலன் மஸ்க் பதிவு…!!
அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு வரக்கூடும் என எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரு வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் விதமாக பல்வேறு தொழில் பிரபலங்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் டொனால்டு டிரம்புக்கு எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது., கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் எனவும் டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகத்தையும் அமெரிக்காவையும் காப்பாற்றுவார் என்றும் எனது வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..