கள்ள காதலர்களுக்கு நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்..! பரபரப்பான மேற்குவங்கம்..!
இணையத்தில் பலரும் பார்க்கப்பட்டு கண்டனத்திற்குரிய வீடியோவாக மாறி இருப்பது ஆண் பெண் இருவரையும் பொதுமக்கள் சுற்றி நிற்க ஒருவர் மூங்கில் கொம்பை வைத்து தாக்கும் வீடியோ தான். இது எங்க எதற்காக இச்சம்பவம் நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள உத்தர் தினாஜிபூர் மாவட்டம், சோப்ரா பகுதியில் தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இதில், அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது.
இதனால் கணவர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டு இருக்கிறார். அங்கு விசாரணை நடத்தப்பட்டு, கள்ளக்காதல் ஜோடிக்கு பொதுவெளியில் சவுக்கடிகள் கொடுக்க வேண்டும் தீர்ப்பு வழங்கப்பட்டள்ளது.
அதன்படி, கள்ளக்காதல் ஜோடியை பொதுவெளியில் வைத்து மூங்கில் கொம்பை வைத்து அவரது கணவர கொடுரமாக இருவரையும் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பேசும் பொருளாக வலம் கொண்டிருபதால் போலீசாருக்கு அடித்த நபரை கைது செய்யும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்