டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் பிரதமர் மோடிக்கு விநாயகர் மற்றும் லட்சுமி இருக்கும் ரூபாய் நோட்டுகளை அச்சிட வேண்டும் என்ற யோசனையை கொடுத்துள்ளார்.
இது குறித்து கூறுகையில், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கடவுளின் அருள் இல்லை என்றால் அனைத்தும் பயனளிக்காமல்தான் போகும் என்றும், ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் காந்தியும் மறுபக்கம் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்களை வைக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில், கரன்சி நோட்டுகளில் விநாயகர் படம் இருப்பதாக மேற்கோள் காட்டி பிரதமருக்கு கடிதம் அனுப்பியதாக கூறினார்.
மதசார்பற்ற இந்தியாவில் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாக இந்து தெய்வங்களான விநாயகர் மற்றும் லட்சுமியை வைப்பது எவ்வாறு தீர்வாகும் என்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மேலும் குஜராத்தில் தேர்தல் வருவதால் இது போன்ற கருத்துக்களை கூறுகிறார் என்றும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.