தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் அவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார்.அதை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் திரைப்படம் நடிக்க இருக்கிறார்
துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருக்கும் இந்நேரத்தில், அஜித்தின் 63வது படம் குறித்தான தகவல்கள் பரவி வருகின்றது. அஜித்தின் 63 வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் மேலும் அந்த படத்தை ஏற்கனவே அஜித்துடன் 4 முறை பணியாற்றியுள்ள சிறுத்தை சிவா தான் இயக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
ஆனால்,அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஆகையால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்ற தகவலும் பரவிவருகிறது இதனால் அஜித் ரசிகர்கள் சற்று கவலையில் இருக்கிறார்கள்.