ஜம்மு காஷ்மீரில் 29 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்ட அணியின் பயிற்சியாளருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் உள்ளார். இவர், இந்தியாவுக்கு ஆதரவாக எந்த காலத்திலும் பேசுவார் . தீவிரவாத செயல்களையும் நேரடியாக கண்டிப்பார். இந்த நிலையில் கம்பீருக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில், உன்னை முதலில் கொல்வோம் என்று 3 வார்த்தை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இந்த மெயிலை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அனுப்பியுள்ளது.
இதையடுத்து, கம்பீர் ராஜேந்திர நாத் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இமெயில் அனுப்பியவரை கண்டுபிடித்து தண்டிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 21ம் தேதி பாஹல்கம் பகுதியில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் கம்பீர் பதிவு வெளியிட்டிருந்த நிலையில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு , புல்வமா தாக்குதலின் போதும் கம்பீர் கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போதும், கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து மிரட்டல் இமெயில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.