இலவச பக்கெட் பிரியாணியா..!! அதுவும் பாய் வீட்டு பிரியாணியா..!!
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் மத நல்லிணக்கத்தைமேம்படுத்தும் வகையில் ரமலான்பன்டிகையை ஒட்டி பொதுமக்களுக்குஇலவச பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது.
நாடு முழுவதும் நேற்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது அதன் ஒரு பகுதியாக இன்று கோயம்புத்தூர் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக, மத நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விழா குழு தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார். விழா குழு செயலாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். விழா குழு ஒருங்கிணைப்பாளர் அசாருதீன் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குருஜி சிவாத்மா, இனாயத்துல்லா, ராஜேந்திரகுமார், அப்துல் அஜீஸ், முகமது ரபிக், அருள்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச பிரியாணிகளை வழங்கினார்.
மனிதம் தலைத்து , மனித நல்லிணக்கம் மனித மனங்களில் ஏற்பட வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளை முன்னிட்டு இப்பகுதி நண்பர்கள் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்து அனைவருக்கும் இலவச பிரியாணிகளை வழங்கினர். இது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று மத நல்லிணக்கம் மேம்பட வேண்டும் என்று விழா குழுவினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..