ரமலான் பண்டிகை..!! தலைவர்கள் வாழ்த்து..? தளபதி விஜய் ஏற்த்த உறுதி..!!
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து இஸ்லாமியர்களும் காலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்று ரமலான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்”. மனித இனத்திற்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்தவர் நபியடிகள்.
கல்வியானது ஆண், பெண் இருவருக்கும் சமமான ஒன்று, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டது என அவர் சொன்ன வழியை அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.
அப்படி, இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகாகவும் என்றும் நாங்கள் முன்னிற்போம் இந்த நன்நாளில் பெருமிதத்தோடும், உரிமையோடும் இஸ்லாமியத் தோழர்களுக்கு எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள், ரமலான் மாதத்தின் முப்பது நாள்களிலும் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, இறையை நினைத்திருந்து நோன்பு எனும் மாண்புடன் தவம் இருந்தமைக்குக் களித்திருந்து மகிழ்ந்திடும் நன்னாள் ரமலான் திருநாள் என குறிப்பிட்டுள்ளார்
ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் இஸ்லாமிய பெருமக்கள் திளைக்கின்றனர் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்
வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள் என தெரிவித்துள்ள வைகோ மனிதநேயத்தின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் அடித்தளம்தான் மதச்சார்பின்மையாகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளை விட்டி அடிப்போம் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்
அண்ணலார் நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத் துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களை இசுலாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஈதுல் பித்ர் பெருநாளில், இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரமலான் கொண்டாடும் அனைத்தும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை :
இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு “சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மேலும், புனித நூலான திருக்குர் ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில், தமிழ் நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் எனவும் கேட்டுக்கொண்டார்.
புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக் கூறும் என் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகள். என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான இளையதளபதி விஜய் தெரித்துள்ளார்.
இன்றும் போல் என்றும் நாம் இதே சகோதரத்துவதுடனும், உறவுகளாக பழக வேண்டும் எனவும்.., மத வெறியால் நம்மை பிரிக்க நினைப்பவர்களின் பேச்சை கேட்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். புறக்கணித்து மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்..
இன்று உலகெங்கும் பல நாட்களாக நோன்பு இருந்து, தக்பீர் முழக்கம் கூறி, என்றும் நம்முடன் சகோதத்துவதுடன் பழகி வரும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மதிமுகம் சார்பாக ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..