ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்களை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களது 8 மாத பெண் குழந்தை ஆரூஹி மற்றும் குழந்தையின் உறவினர் மாமா என்பவர்களை அமெரிக்காவின் மெர்சட் பகுதியில் சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார்.
The #California police have released CCTV footage showing the kidnapping of an #Indian-origin family in Merced County. pic.twitter.com/xQo8rd4GQJ
— Sandeep Panwar (@tweet_sandeep) October 6, 2022
இந்நிலையில் கடந்த 3ம் தேதி அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி குழந்தை உள்பட 4 பேரையும் கடத்திச் சென்றார். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை உட்பட 4 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் பேசுகையில் ஜீசஸ் மானுவேல் சல்காடோ என்பவரை கைது செய்துள்ளோம். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 4 பேரியும் இவர் கடத்திச் செல்வது தெரியவந்தது.
ஜஸ்தீப் சிங்கின் அலுவலகத்தில் ஜீசஸ் மானுவேல் சல்காடோ ஊழியராக பணியாற்றி உள்ளார். முன்விரோத காரணமாக பழிவாங்கும் வகையில் ஜஸ்தீப் சிங்கையும் அவரது குடும்பத்தினரையும் கடத்தி கொலை செய்துள்ளது தெரியவந்தது.