“கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா..”
திருப்பூர் புகழ் பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தங்க காப்பு அணிவித்து சிறப்பு பூஜை..நடைபெற்றது.
ஆடி மாதம் என்றாலே அம்மன்களுக்கு மிகவும் விஷேசமான மாதம் என சொல்லலாம்.., அப்படி பட்ட ஆடி மாதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு பலன்கள் உண்டு . அதில் ஒன்று தான் “ஆடிப்பூரம் “..
ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருளை பெறுவதற்கு ஏற்ற ஒரு “ஆடிப்பூரம்” இந்த நாள் அம்மன் அவதரித்த ஒரு நாள் குறிப்பாக “ஆண்டாள் நாச்சியார்” அவதரித்த தினம் தான் “ஆடிப்பூரம்” ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றனர்.
ஆண்டாள் நாச்சியார் அம்மனை போற்றும் விதமாக தான் “ஆடிப்பூரம்” கொண்டாடப்படுகிறது. சைவ வைணவ பாகுபாடு இன்றி அனைத்து அம்மன் கோவில்களிலும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு உற்சவ நாள் “ஆடிப்பூரம்“. முனிவர்களும் அம்பிகை அம்மனுக்காக ஆடிப்பூர நாட்களில் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
உலகத்தை காக்கும் அன்னை உமாதேவியும் இந்த நாளில் அவதரித்தாள்.., இன்னும் பிரசித்தி பெற்ற மாதமாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனகாப்பு, குங்குமகாப்பு, வளைகாப்பு மற்றும் வளையல் அலங்காரம் பக்தர்களால் நடத்தப்படும்.
கோட்டை மாரியம்மன் ஆடிப்பூர திருவிழா :
திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது ஸ்ரீ அருள்மிகு கோட்டை மாரியம்மன் க்கு 108 பால்குடம் அபிஷேகமும் தொடர்ந்து பால், தயிர் ,பன்னீர், சந்தனம் ,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கலப் பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் அம்மனுக்கு வளையல்கள், பழங்கள், புடவை உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளுடன் படையல் இட்டு அம்மனை வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சலில் தாலாட்டு பாடி உற்சவ நிகழ்ச்சியும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..